கனமழையால் மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மஞ்சளார் ஆற்றில் 184 கன அடி உபரி நீர் திறப்பு.
வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவு நேரத்தில் கன மழை பெய்தது. இந்த மலையானது இரவு 11 மணி வரை நீடித்தது. இந்த நிலையில் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் நீர்வரத்தினுக்கான பட்ட மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து திடீரென 184 கனஅடியாக உயர்ந்தது. ஏற்கனவே மஞ்சளார் அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டி 30 நாட்களுக்கு மேலாக முழு கொள்ளளவுடன் இருந்த நிலையில், அணைக்கு நீர் வரத்து இல்லாது இருந்தது. இதனிடையே நேற்று பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து 184 கனஅடியாக அதிகரித்த நிலையில் அணைக்கு வரும் 184 கன அடி நீரை அப்படியே மஞ்சளார் ஆற்றில் பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டுள்ளனர். மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இன்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மஞ்சளார் ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளதோடு மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.