ஆய்க்குடியில் ரூ18.70 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி
ரூ18.70 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி;
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ18.70 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ஆய்க்குடி பேரூராட்சி 4-ஆவது வாா்டு உலகம்மன் கோயில் தெருவில் சிமென்ட் சாலை, கிராம நிா்வாக அலுவலகம் அருகில் வடிகால் மற்றும் பாலம் அமைத்தல் பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன் பணிகளைத் தொடங்கி வைத்தாா். செயல் அலுவலா் ஞா.தமிழ்மணி, இளநிலை பொறியாளா் பி.சிவக்குமாா் மற்றும் 4-ஆவது வாா்டு உறுப்பினா் பூ.புணமாலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.