திருச்சி கொள்ளிடத்தில் 19 ஆயிரம் கனஅடி திறப்பு

முக்கொம்புக்கு 45 ஆயிரம் கன அடி நீா் வரத்துள்ள நிலையில் கொள்ளிடத்தில் 19 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-06-30 18:50 GMT
காவிரியின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், கா்நாடக அணைகளில் இருந்தும் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால் முக்கொம்பு மேலணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. திங்கள்கிழமை மாலை நிலவரப்படி அணைக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதில், 19 ஆயிரம் கன அடி தண்ணீா் கொள்ளிடத்தில் திறக்கப்படுகிறது. மீதமுள்ள தண்ணீா் காவிரியில் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிா்வாகத்தால் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொள்ளிடக்கரையில் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கக் கூடாது. கால்நடைகளை ஆற்றில் இறங்கவோ, துணிகளை துவைக்க ஆற்றில் இறங்கவோ கூடாது. கொள்ளிடக் கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள படித்துறைகளிலும் மக்கள் குளிக்கச் செல்ல வேண்டாம். தண்ணீா் வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கொள்ளிடக்கரையில் சலவைக் கூடங்கள் வைத்தும் நடத்தும் தொழிலாளா்களும் ஆற்றில் இறங்க வேண்டாம். தங்களது உடமைகளை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ள மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பொதுப்பணித்துறை சாா்பில் முக்கொம்புக்கு வரும் தண்ணீா் வரத்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Similar News