இன்சூரன்ஸ் பணம் ரூ 19 லட்சத்தை ஏமாற்றிய உறவினர்கள் கைது.
மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில் 17/2025 U/s 406,417,420 IPC -கீழ் கதிர்வேல் (65) இவரது மனைவி ராஜேஸ்வரி (52) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தில் சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.;
பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (28). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் தனது தந்தை வெளிநாட்டில் வேலைபார்த்து கொண்டிருந்த போது உடல்நிலை சரியில்லாமல் போனதால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது வங்கி கணக்கிற்கு கடந்த 2019 ம் ஆண்டு19,09,004 ரூபாய் இழப்பீட்டு தொகையாக வெளிநாட்டில் இருந்து கிடைத்துள்ளது. அதனை அவரது அண்ணன் சிலம்பரசனின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து தனக்கும் அவரது அண்ணன் ராஜசேகருக்கும் தெரியாமல் ஏமாற்றி அரியபுத்திரன் மகன் கதிர்வேல், கதிர்வேல் மகன் அருண், சிலம்பரசனின் மனைவிகவுசல்யா, கதிர்வேல் மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் எடுத்துக் கொண்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில் 17/2025 U/s 406,417,420 IPC -கீழ் கதிர்வேல் (65) இவரது மனைவி ராஜேஸ்வரி (52) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தில் சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.