ஐடி ஊழியர் வீட்டில் 19 பவுன் நகை ரூ 70 ஆயிரம் பணம் திருட்டு

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட அங்காளம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு போலீசார் வலைவீச்சு

Update: 2024-08-08 06:37 GMT
எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த நாளில்  குடியிருப்பு வீடுகளில் நிகழ்ந்த திருட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு...  வீட்டில் திருட்டு போனதாக புகாரளித்த ஐடி ஊழியர் ஒருவர் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது செய்தியாளர்களை எங்களது வீட்டில் செய்தி எடுக்க கூடாது என ஒருமையில் பேசி கேமராவை பறிக்க முயன்றது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது... சேலம் மாவட்டம் எடப்பாடி ஏரிரோடு பகுதியை சார்ந்த லாரி கிளீனர் ஆதி என்கின்ற ஆதித்யா (20) என்ற இளைஞர் தனது பெயர் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஆகஸ்ட் 6ஆம் தேதி அதிகாலை  எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்திய 10 மணி நேரத்தில் ஆதித்யாவை எடப்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த இச்சம்பவத்தையடுத்து அதே நாளில் இரவு பல்வேறு குடியிருப்பு வீடுகளில் திருட்டு சம்பவமும் அரங்கேறி எடப்பாடியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ... எடப்பாடியில் இருந்து பூலாம்பட்டி செல்லும் பிரதான சாலை கோண பைப் அருகே வசிக்கும் கிருஸ்டோபர், ராணி, மனோன்மணி ஆகியோரின் அடுத்தடுத்து வீடுகளில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கதவை உடைத்து திருட முயற்சித்த போது உறங்கிக் கொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு  கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பி சென்ற மர்ம நபர்கள் ஜலகண்டபுரம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் காசாளரிடம் மிரட்டிபணம் பறிக்க முயற்சித்தும் முடியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனிடையே எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட அங்காளம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ஐடி ஊழியர்களான சங்கீதா,சுரேஷ் தம்பதியினர் அவர்களது பாட்டியுடன் கடந்த 5ம் தேதி மாலை வீட்டினை பூட்டி விட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவிற்காக உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு 7ம் தேதி மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் பீரோவில் இருந்த 19 சவரன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் விட்டதாக எடப்பாடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டுச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை ஐடி ஊழியர் சுரேஷ் எங்களது வீட்டை வீடியோ படம் எடுத்து செய்தி போடக்கூடாது என்றும் மீறினால் வழக்கு தொடர்வேன் என ஒருமையில் பேசி செய்தியாளர்களின் கேமராவை பறிக்க முயற்சித்தார். தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்களை தனது செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டு மிரட்டி உள்ளார் அதனால் உண்மையிலேயே திருட்டு போனதா? அல்லது திருட்டு போனதாக பொய்யாகப் புகார் அளித்தாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.. ஆனாலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இதனிடையே  அடுத்தடுத்து தொடர் திருட்டு சம்பவம் அரங்கேறியதாக கூறப்பட்டு காவல் நிலையத்தில் புகார் வந்த வண்ணம் இருப்பது எடப்பாடி நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ...

Similar News