லஞ்சம் கேட்பதாக வீடியோ வெளியான 2மணி நேரத்தில் தீர்வு: விஏஓ சஸ்பெண்ட்

போரூர் அருகே பட்டா மாற்றுவதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாக கூறி வெளியிட்ட வீடியோ வெளியான சில மணி நேரத்தில் தீர்வு கண்ட நிலையில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

Update: 2024-05-24 14:21 GMT

முதல்வருக்கு நன்றி சொன்ன நபர்

பட்டா பெயர் மாற்றம் செய்ய வி ஏ ஓ லஞ்சம் கேட்பதாக முதல்வருக்கு ட்விட்டர் மூலம் வீடியோ வெளியிட்ட நபர்..இரண்டு மணி நேரத்தில் தீர்வு கண்ட இரு ஆட்சியர்கள் .

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட , பரணிபுத்தூர் விஏஓ சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. போரூர் அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அதில் கடலூர் மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் பரணிபுத்தூர் பகுதியில் சொந்தமான நிலத்தை பட்டா பெயர் மாற்றம் ஆன்லைனில் செய்திருந்ததாகவும் ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்து தர முடியும் என கிடப்பில் போட்டதாகவும் தான் திமுக விற்கு ஓட்டு போட்டதாகவும் ஆனால் வருவாய் துறையில் லஞ்சம் தலை விரித்து ஆடுவதாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ பதிவு செய்து முதல்வரை டேக் செய்து அந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அந்த நபரை தொடர்பு கொண்டு அவரது பட்டா பெயர் மாற்றம் செய்து முடித்த நிலையில் பரணிபுத்தூரிலும் தனக்கு அதே நிலை இருப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த புகாரை அடுத்து அந்த நபருக்கு பரணிபுத்தூரில் உள்ள நிலம் பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்ட நிலையில் அதனை உடனடியாக செய்து கொடுத்த தமிழக முதல்வருக்கும் , கடலூர் , காஞ்சிபுரம் ஆட்சியர்களுக்கும் நன்றி தெரிவித்தும் மற்றொரு வீடியோவை உடனடியாக வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் பரணிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கிரண்ராஜ் லஞ்சம் கேட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்,

உரிய விசாரணை செய்யப்பட்டு லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் தற்போது பரணிபுத்தூர் விஏஓ கிரண்ராஜை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News