கன மழையால் கும்பக்கரை அருவியில் பெறும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 2,வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.

கும்பக்கரை அருவி

Update: 2024-08-13 06:17 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று நல்லிரவு பெய்த கன மழையால் மேலும் அறிவிக்க நீர்வரத்து அதிகரித்து பெறும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 2,வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக வனத்துறை அறிவித்துள்ளனர். மேலும் அருவிக்கு வரும் நீரின் அளவு குறைந்து சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News