விருத்தாசலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்
உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை
விருத்தாசலத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்லதம்பி, சுப்பிரமணியன், பாலாஜி, ஆகியோர் கொண்ட குழுவினர் விருத்தாசலம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். மேலும் புகைபிடிக்கக் கூடாது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பலகைகள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். மேலும் கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். தொடர்ந்து பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதால் வழக்கு பதிவு செய்யப்பட்ட 2 கடைகளை பூட்டி சீல் வைத்து எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகித்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒவ்வொரு கடையாக சென்று எச்சரித்தனர்.