தூத்துக்குடியில் ரூ. 2 லட்சம் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ. 2 லட்சம் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-09-16 05:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடியில் சரக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்களை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . தூத்துக்குடி மடத்தூர் சாலையில் முருகேசன் நகர் பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அதில், தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தனவாம். அவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சம் எனக் கூறப்படுகிறது. அனைத்தையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Similar News