தாளவாடியில் ரேஷன் அரிசி கடத்தி 2 பேர் கைது
தாளவாடியில் ரேஷன் அரிசி கடத்தி 2 பேர் கைது;
தாளவாடியில் ரேஷன் அரிசி கடத்தி 2 பேர் கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலை கிராமம் தமிழக - கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. நேற்று அருள்வாடி என்ற இடத்தில் தாளவாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரைச் சேர்ந்த முஜீப் அகமது(44) , தாளவாடி, தொட்ட காசனூரைச் சேர்ந்த சீனிவாசன் (48) இருவரும் வாகனத்தில் தமிழகத்திலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 05 மூட்டையில் சுமார் 220 கிலோ ரேஷன் அரிசி, பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து மாவட்ட உணவு பொருட்கள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.