மாவட்டத்தில் மழை காரணமாக 2-வது நாளாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு.
மாவட்டத்தில் மழை காரணமாக 2-வது நாளாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு.
மாவட்டத்தில் மழை காரணமாக 2-வது நாளாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை- ஆட்சியர் அறிவிப்பு. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும். இதனால் இன்று முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை தமிழக முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பரவலாக பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு செய்தது. மேலும், தமிழக வானிலை மையம் அறிவித்தது போல தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது மேலும், நேற்று முன்தினம் மாலை முதல் கரூர் மாவட்டத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நேற்று டிசம்பர் 12ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்த நிலையில், மீண்டும் இன்று டிசம்பர் 13ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.