தென்காசி மாவட்டம் புளியரை போக்குவரத்து சோதனை சாவடி எதிர்புரம் போலீசார் சார்பில் கனிம வளங்களை கண்காணிப்பதற்காக புதிதாக வைத்த கண்காணிப்பு கேமராவை அந்தப் பகுதியாக வந்த நபர்கள் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது புளியரை தாட்கோ நகரை சேர்ந்த தஸ்தகிர்(50), முருகன்(45) ஆகிய விசாரணையில் தெரியவந்தது, இதுகுறித்து 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரும் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.