வெள்ளகோவிலில் லாட்டரி சீட்டு விற்ற 2பேர் கைது
வெள்ளகோவிலில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது காவல்துறை நடவடிக்கை
வெள்ளகோவில் உதவி ஆய்வாளர் சந்திரன் முத்தூர் சாலையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெள்ளகோவில் இந்திரா நகரில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 58) என்பவரை கைது செய்தார். இதேபோல் முத்தூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் குமார் கரட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த கரட்டுப்பாளையம் விமல் குமார் (33) என்பவரை கைது செய்தார்.