சாலை விபத்தில் 2 பேர் பலியான குடும்பத்திற்கு தமிழக அரசு உதவி செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரி ஹமிதியா பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்த கால்பந்தாட்டவீரரும் அவரது தம்பியும் சாலை விபத்தில் பலியானார்கள் ஒரு சகோதரி காயமடைந்துள்ளார் அவரது குடும்பத்திற்கு உதவி செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந்துரை;
மயிலாடுதுறை அருகே எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கணை ஒருவரும் அவரது சகோதரரும் சாலை விபத்தில் பலியானார்கள். ஒரு சகோதரி மட்டும லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இறந்துபோனவர்களின் குடும்பத்தாருக்கு அரசு உதவி செய்யவேண்டும் என கிராம மக்கள் வழக்கறிஞர் சங்கமித்திரனுடன் சென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரத்தியை சந்தித்து துணை முதலமைச்சருக்கு அனுப்பிய மனுவை அளித்தனர். இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில் விபத்தில் இறந்தவர்களுக்கான நிதியை உடனடியாக கிடைக்க ஆவனசெய்கிறேன் என்றார், மேலும் காயமடைந்துள்ள மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதற்கான நிதி கிடைக்கவும் மேலும் அவர் கால்பந்தாட்டத்தில் மீண்டும் பங்கேற்கவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்திற்கு அரசு உதவி கிடைப்பதற்கு பரிந்துரை செய்கிறேன் என்|று கூறினார்.