குமரி மாவட்டம் மிடாலக்காடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பணம் வைத்து சூதாடுவதாக இன்று 1-ம் தேதி கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ் ஐ ராஜ்குமார் தலைமையில் போலீசார் விளையாட்டு மைதானத்தில் சென்று கண்காணித்தனர். அப்போது எட்டு பேர் அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் ஆறு பேர் தப்பி ஓடிவிட்டனர். இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதை அடுத்து அவர்களிடம் இருந்து ரூபாய் 7 ஆயிரத்து 50 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.