
நாகர்கோவிலில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (45). தொழிலாளி. இவர் நேற்று அந்தப் பகுதியில் உள்ள வெள்ளை மண் ஓடை பாலம் பகுதியில் பைக் உடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது பெயிண்டிங் தொழில் செய்து வரும் இடலாக்குடி பகுதி சேர்ந்த மதன் (22), சூர்யா (23) ஆகியோர் சேர்ந்து ராஜேஷ் - ஐ வழிமறித்து கெட்ட வார்த்தைகள் பேசி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் சத்தம் போடவே ராஜேஷை கீழே தள்ளிவிட்டு இரண்டு பேரும் தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக ராஜேஷ் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மதன் மற்றும் சூர்யாவை கைது செய்தனர். இவர்கள் மீது கோட்டார், சுசீந்திரம் காவல் நிலையங்களில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.