அரகண்டநல்லூர் அருகே உண்டியலை உடைத்து திருட்டு 2 பேர் கைது

உண்டியலை உடைத்து திருட்டு 2 பேர் கைது;

Update: 2025-02-01 07:04 GMT
அரகண்டநல்லூர் அருகே சத்தியகண்டனூர் கிராமத்தில் 5 அய்யனார், ஸ்ரீ வீரன் மற்றும் அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள உண்டியலை மர்மநபர்கள் 2 பேர் உடைத்து அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கையை திருடிக்கொண்டி - ருந்தனர். இதைபார்த்த பொதுமக்கள், மர்மநபர்கள் 2 பேரையும் மடக்கிபிடித்து அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து பிடிபட்ட 2பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வீரபாண்டி மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (வயது 20) மற்றும் மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பதும் தெரிந்தது. இதையடுத்து உண்டியலை உடைத்து பணம் திருடியதாக கூறிரஞ்சித் உள்பட 2பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Similar News