கோடியக்காடு ஊராட்சி 2 ஆசிரியர்கள் ராஜ கலைஞன் விருது
முன்னாள் எம்பி பாராட்டு;
திருச்சி 29 -ம் ஆண்டு தமிழக பண்பாட்டுக் கழகம் நடத்தும், ராஜகலைஞன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, தமிழக பண்பாட்டுக் கழக மாநிலத் தலைவர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். விழாவில், கல்வி சேவை புரிந்த சிறந்த அரசு நல்லாசிரியர் பெருமக்களுக்கும், திரை நட்சத்திரங்களுக்கும், சிறந்த சேவை புரிந்த நிறுவனங்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் விருது, தங்கப்பதக்கம், பாராட்டு பட்டயம் ஆகியவற்றை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். விழாவில், மயிலாடுதுறை முன்னாள் எம் பி ராமலிங்கம் விருது பெறுபவர்களை வாழ்த்தி பேசினார். விழாவில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கோடியக்காடு ஊராட்சியில் இயங்கி வரும் சுந்தரம் அரசு உதவி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரா.நீலமேகம் மற்றும் இடைநிலை ஆசிரியை வி.க.கவிதா ஆகிய இருவருக்கும், அவர்களது கல்வி சேவையை பாராட்டி ராஜகலைஞன் விருது, தங்கப்பதக்கம், பாராட்டு பட்டயம் ஆகியவற்றை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கினார். விழாவில், நாகூர் தர்கா ஆலோசனை குழு தலைவர் செய்யது முகமது கலிஃபா சாஹிப், மாநில நல்லாசிரியர் அறிவுடை நம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். ராஜ கலைஞன் விருது பெற்ற ஆசிரியர் நீலமேகம், ஆசிரியை கவிதா ஆகியோரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் வாழ்த்தினர்.