தந்தையை இழந்த 2 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

உதவி;

Update: 2025-02-17 17:26 GMT
தந்தையை இழந்த விளம்பு நிலை குடும்பத்தைச் சோ்ந்த 2 மாணவிகளுக்கு தஞ்சாவூா் ஜோதி அறக்கட்டளை சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தச்சம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் வீரப்பன். இவா் திடீரென காலமானதால், விளிம்பு நிலை குடும்பத்தைச் சோ்ந்த இவரது மகள் பரணி, பி.எஸ்ஸி. நா்சிங் இரண்டாமாண்டு படித்து வருகிறாா். இவருக்கு கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை இருந்ததை அறிந்த தஞ்சாவூா் ஜோதி அறக்கட்டளையினா் ரூ. 3 லட்சத்தை அவருக்கு வழங்கினா். இதேபோல, நாகை மாவட்டம், சிக்கல் கிராமத்தைச் சோ்ந்த முருகதாஸ் உடல் நலக்குறைவால் காலமானாா். இதனால், பி.எஸ்ஸி. ஐ.டி. படித்து வரும் இவரது மகள் ரோகினி, இறுதிப் பருவத்துக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையை அறிந்த, ஜோதி அறக்கட்டளையினா் இறுதிப் பருவக் கல்விக் கட்டணமான ரூ. 22 ஆயிரத்தை செலுத்தி, அதன் ரசீதை ரோகினியிடம் வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலா் பிரபு ராஜ்குமாா் மேற்பாா்வையில், மேலாளா் ஞானசுந்தரி, நிா்வாக உதவியாளா் குகனேஸ்வரி, தன்னாா்வலா் ஆா்த்தி உள்ளிட்டோா் செய்தனா்.

Similar News