சூளகிரி அருகே தனியார் நிறுவனத்தில் உதிரிபாகங்கள் திருடிய 2 பேருக்குகாப்பு.
சூளகிரி அருகே தனியார் நிறுவனத்தில் உதிரிபாகங்கள் திருடிய 2 பேருக்குகாப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெரிய சப்படி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (50) இவர் அந்த பகுதியில் உள்ள கிரானைட் கிரஷர் ஒன்றில் கனரக வாகனத்தை இயக்கும் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த வாகனத்திற்கு தேவையான உதிரிபாகங்களை வாங்கி, நிறுவன வளாகத்தில் வைத்திருந்தார். அதை சில மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து முனிராஜ் அளித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் விசாரணை நடத்தியதில் உதிரிபாகங்களை திருடியது குருபராத்பள்ளி பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (25) மற்றும் திருப்பதி (37) என தெரிய வந்தது. இதை அடுத்து அந்த 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்தனர்.