கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 74 தேர்வு மையங்களில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் 18 ஆயிரத்து 228 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். 524 பேர் பங்கேற்கவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 74 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. 124 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 9,183 மாணவர்கள், 9,569 மாணவியர் என 18 ஆயிரத்து 752 பேரும், தனித்தேர்வர்கள் 150 ஆண்கள், 109 பெண்கள் என 214 பேரும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நேற்று காலை தேர்வு தொடங்கிய நிலையில், 8,910 மாணவர்கள், 9,318 மாணவியர் என மொத்தம் 18 ஆயிரத்து 228 பேர் தேர்வெழுதினர். 273 மாணவர்கள், 251 மாணவிகள் என 524 பேர் தேர்வுக்கு வரவில்லை. அதேபோல் தனித்தேர்வர்களில் 90 ஆண்கள், 94 பெண்கள் என 184 பேர் நேற்று தேர்வெழுதினர். 30 பேர் தேர்வுக்கு வரவில்லை.