இளம் பெண் மீது  தாக்குதல் 2 பேர் மீது வழக்கு

வெள்ளிச்சந்தை;

Update: 2025-03-11 12:39 GMT
குமரி மாவட்டம் முட்டம் ஆரோக்கியமாதா நகர் தெருவை சேர்ந்தவர் அனிஸ்டன் மனைவி ஷைனி நிவிஷா(25). இவருக்கு சொந்தமான இடம் அதே பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்க ஷைனி நிவிஷா முயற்சி செய்து வந்தார். ஆனால் முட்டத்தை சேர்ந்த ஜோசப் சேகர் என்பவர்  அந்த நிலத்தை விற்பனை செய்யவிடாமல் முட்டுக்கட்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.        இந்த நிலையில் நேற்று ஜோசப் சேகர், வினி லிவின்  ஆகியோர் ஷைனி நிவிஷா வீட்டில் நுழைந்து, அவரை அடித்து உதைத்ததோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்களாம். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஷைனி நிவிஷா குளச்சல் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.        இது குறித்து அவர் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜோசப் சேகர், வினி லிவின்  ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News