சுசீந்திரம் பகுதியை சேர்ந்த வேலு என்பவர் நேற்று பள்ள விளை சானல்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வள்ளவிளை பகுதி பிரகாஷ் (28), பெரு விளை நிஷாந்த் (31) ஆகியோர் அவரை வழிமறித்து ரூ 500 பணம் கேட்டுள்ளனர். வேலு உயிருக்கு பயந்து தன்னிடம் ரூ. 200 மட்டுமே உள்ளது என கூறி பணத்தை கொடுத்துள்ளார். அந்த நேரத்தில் பொதுமக்கள் சிலர் வரவே பிரகாஷ், நிஷாந்த் ஆகியோர் வேலுவை கீழே தள்ளிவிட்டு கத்திய காட்டி மிரட்டி, பணத்தையும் பறித்து சென்றுள்ளனர். இது குறித்து வேலு ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பிரகாஷ், நிஷாந் ஆகிய இருவரை கைது செய்தனர். கைதான இருவரும் காவல் நிலைய குற்ற சரித்திர பதிவேடு பட்டியலில் உள்ளனர். இவர்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.