
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முருங்கவிளை பகுதியை சேர்ந்தவர் டாஸ்பின் விஜயகுமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜினிலா (32) இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் குமார் என்ற பள்ளியடி குமார் ( 46). இவர் மதிமுகவில் மாவட்ட அணி நிர்வாகியாக உள்ளார். குமார் தன் நண்பரான மதுரையை சேர்ந்த இம்ரான் (25)என்பவருடன் கிரிப்டோ கரன்சி தொழில் செய்துள்ளார். அப்போது ஜெனிலாவிடம் தங்கள் தொழிலில் ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூபாய் 2 லட்சம் கிடைக்கும். 100 மடங்கு லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று ஜெனிலா ரூ. 27 லட்சத்து 83 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர்கள் பணம் கூடுதல் பணம் கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து தான் கொடுத்த பணத்தை குமாரிடம் ஜெனிலா கேட்டுள்ளார். அவருக்கு முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டுள்ளதை உணர்ந்த ஜெனிலா தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்ட் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பெயரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மதுரையிலிருந்து இம்ரானை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து குமார் மற்றும் இம்ரான் கைது செய்யப்பட்டனர்.