
குமரி மாவட்டம் வேர்க்கிளம்பி அருகே உள்ள மாத்திரவிளை பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (62). இவருக்கு அந்த பகுதியில் வாழைத்தோட்டம் உள்ளது. தோட்டத்தை சுற்றி சூரிய ஒளி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பேட்டரி, ரிசீவர், கண்ட்ரோலர் போன்ற மின் சாதனங்கள் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் அவர் தோட்டத்திற்கு சென்ற போது அங்கிருந்த பேட்டரி, ரிசீவர், கண்ட்ரோலர் ஆகியவற்றை காணவில்லை. அதனை யாரோ திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு 26 ஆயிரத்து 500 ஆகும். இது குறித்து கொற்றிகோடு போலீசில் வின்சென்ட் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தோட்டத்தில் உள்ள பொருட்களை திருடியது விஜில் ராஜ் ( 43) ,அருள்ராஜ் (49) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயராஜ் போலீஸ் ரௌடிகள் பட்டியலில் உள்ளார்.