அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில் கோவிலில் சிலை திருடிய 2 பேர் கைது
பல்லடம் அருகே அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில் கோவிலில் சிலை திருடிய 2 பேர் கைது;

திருப்பூர் அருகே உள்ள செந்தூரன் காலனி பகுதியில் உள்ள சிவசக்தி விநாயகர் கோவிலில் 14 அடி உயர முள்ள வெண்கல சிலை நேற்று முன் தினம் திருட்டுப் போனது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று மகாலட்சுமி நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அங்கித் திவாரி (வயது 26) மற்றும் 14 வயது உடைய சிறுவன் என்பதும், இவர்கள் இருவரும் அருள்புரம் செந்தூரன் காலனி கோவிலில் சிலை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து முருகன் சிலையை பறிமுதல் செய்தனர்.