*விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் 2-வது முறையாக போலி முகநூல் கணக்கு-பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாமென்றும் விழிப்புணர்வுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த

*விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் 2-வது முறையாக போலி முகநூல் கணக்கு-பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாமென்றும் விழிப்புணர்வுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்*;

Update: 2025-03-31 17:36 GMT
*விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் 2-வது முறையாக போலி முகநூல் கணக்கு-பொதுமக்கள்  யாரும் நம்பி ஏமாற வேண்டாமென்றும் விழிப்புணர்வுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த
  • whatsapp icon
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் 2-வது முறையாக போலி முகநூல் கணக்கு-பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாமென்றும் விழிப்புணர்வுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்‌ அவரது முகநுால் கணக்கில் அரசு நிகழ்ச்சிகள், அறிவிப்புகள், பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்த செயல்பாடுகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில்‌ஆட்சியரின் புகைப்படத்துடன் ஏற்கனவே கடந்தாண்டு அக்டோபரில் போலி முகநுால் கணக்கு துவங்கப்பட்டது. அதிலிருந்து சிலரிடம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட முயற்சி நடந்தது. இந்த போலி கணக்கு குறித்தும், அதன் மூலம் பணம் கேட்பவர்களிடம் யாரும் கொடுத்து ஏமாற வேண்டாம் என விழிப்புணர்வு செய்தி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது. தற்போது 2-வது முறையாக ஆட்சியர் ஜெயசீலன் தன் முகநுால் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் மீண்டும் போலி முகநுால் கணக்கில் மோசடியில் ஈடுபட முயன்றுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரின் முகநுால் பக்கத்தில் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி (மெசேஜ்) அனுப்புவர்களை மர்ம நபர்கள் குறி வைத்து மெசேஜ் மூலம் தொடர்பு கொள்கின்றனர். அவசர தேவை எனக்கூறி பண மோசடியில் ஈடுபட முயற்சிக்கின்றனர். தனிப்பட்ட முறையில் யாரும் முகநுால் பக்கத்தில் மெசேஜ் அனுப்ப வேண்டாம். இதுபோன்ற மோசடிகள் அடிக்கடி நடப்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News