வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் 2 வது நாளாக வெளுத்து வாங்கிய கனமழை....*
வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் 2 வது நாளாக வெளுத்து வாங்கிய கனமழை....*;
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் 2 வது நாளாக வெளுத்து வாங்கிய கனமழை.... தமிழகத்தில் வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக காணப்படுகிறது .குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் பாட்டி வதைத்து பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை என்பது இருந்து வந்தது.இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் உட்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம் , தம்பிபட்டி , மகாராஜபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட ஊர் பகுதிகளிலும்,மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலான அத்திகோயில், பிளவக்கள் அணை ,கோவிலாறு அணை உள்ளிட்ட பகுதிகளிலும் 2 வது நாளாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிச்சான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...