வடமாம்பாக்கம் : மின்கம்பிகள் மிதித்து 2மாடுகள் பலி!
மின்கம்பிகள் மிதித்து 2மாடுகள் பலி!;

ராணிப்பேட்டை மாவட்டம் வடமாம்பாக்கம் கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் இவருக்கு சொந்தமான 2 மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று விட்டு நேற்று இரவு வீட்டுக்கு செல்லும் வழியில் மின் கம்பி அறுந்து கிடந்தது. இதனை மாடுகள் கவனிக்காமல் சென்றதில் இரண்டு மாடுகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்தன. இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார், வருவாய்த்துறை மற்றும் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.