
ஈத்தாமொழி அருகே சாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா அல்வின் மனைவி சுஜி (38) இவரது உறவினர் ஈத்தமொழியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை அடுத்து நேற்று சுஜி வங்கியிலிருந்து ரூபாய் 70 ஆயிரம் எடுத்துக்கொண்டு பஸ்ஸில் ஏறி, ஈத்த மொழி சந்திப்பில் வந்து இறங்கினார். அப்போது நடந்து சென்ற போது இரண்டு பெண்கள் அவரை பின்தொடர்ந்து சென்று திடீரென சுஜியின் ஹேண்ட் பேக்கை திறந்து அதில் இருந்த பணத்தை திருட முயன்றனர். சுஜி கூச்சல் இட்டார். பொதுமக்கள் ஓடி வந்து தப்பி செல்ல முயன்ற பெண்களை படித்து ஈத்தாமொழி போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சியை சேர்ந்த வெள்ளச்சி (43), ஜோதி (35) என்பது தெரியவந்தது. போலீசார் இரண்டு பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து, அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனர்.