போச்சம்பள்ளி: இறைச்சி கடைக்காரரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது.
போச்சம்பள்ளி: இறைச்சி கடைக்காரரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது.;

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தாதம்பட்டி அப்பாவு நகரை சேர்ந்தவர் ராஜதுரை (30) கோழி இறைச்சி கடை நடத்தி வரும் நிலையில் இவர் நேற்று முன்தினம் அத்திகானூர் கூட்டு ரோடு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ராஜ துரையிடம் பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து ராஜதுரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தியதில் பணம் பறித்தது மைலம்பட்டி சரவணன் (46), போச்சம்பள்ளி பழனி ஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (48) என்றும் அவர்கள் மீது போச்சம்பள்ளி போலீசில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.