வங்கி ஊழியர் வீட்டில் திருடிய 2 பேர் கைது

அருமனை;

Update: 2025-04-11 13:27 GMT
குமரி மாவட்டம் மேல்புறம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். நெல்லையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியர் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தபால் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 20ஆம் தேதி இவர்களது வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்து 35 பவுன் நகைகளை கும்பல் திருடி சென்றது. இது குறித்த புகாரின் பேரில் அடுமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.      பின்னர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்பட்ட அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் இரண்டு கொள்ளைகளில் ஒருவர் இடைக்கோடு பகுதி-ஐ சேர்ந்த விஜயகுமார் என்ற அனில் L48) என்பது தெரிய வந்தது. இதை அடுத்து அவரை முதலில் கைது செய்தனர்.      மேலும் அவரது தகவல் பேரில் ராஜன் (62) என்பவரையும் கைது செய்தனர். ராஜன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர். பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார், அருமனை  போலீஸ் நிலையம்  கொண்டு வந்து விசாரித்தனர். பின்னர் திருடிய சுமார் 20 பவுன் நகைகளை மீட்டுள்ளனர். தொடர்ந்து இருவரையும் குழித்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவிலில் உள்ள சிறையில் அடைத்தனர்.

Similar News