சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமி சிலைகள் திருட்டு போனது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சாமி சிலைகள் திருடியதாக பனமரத்துப்பட்டியை சேர்ந்த சங்கர் (வயது 22), கவுதம் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.