கோவை: கூட்ட நெரிசலில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது !
கோவை மாநகரில் கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.;
கோவை மாநகரில் கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த முருகேஷ்வரி (36) மற்றும் ராதா (35) ஆகிய இரு பெண்களை போலீசார் நேற்று கைது செய்தனர். கடந்த ஒரு வருடத்தில் 30க்கும் மேற்பட்ட நகைப்பறிப்பு புகார்கள் வந்த நிலையில், தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த போலீசார், சிசிடிவி கேமராக்கள் மற்றும் பேருந்துகளில் மாறுவேடத்தில் கண்காணிப்பு மேற்கொண்டனர். இந்நிலையில், டவுன்ஹால் பகுதியில் இளநீர் குடித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகைப்பறிக்க முயன்றபோது இருவரும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். விசாரணையில், இவர்கள் கடந்த ஒரு வருடமாக கேரளாவிலும் கோவையிலும் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டதும், கோயில் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நோட்டமிட்டு வயதான பெண்களிடம் நகைகளை பறித்ததும் தெரியவந்தது. இவர்கள் மீது கேரளாவில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. நகைப்பறிப்பு மூலம் கிடைத்த பணத்தில் வீடு, நிலம் வாங்கி சொகுசாக வாழ்ந்து வந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.