உடைந்த பீர் பாட்டிலை வைத்து மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல் அருகே வாலிபரின் கழுத்தில் உடைந்த பீர் பாட்டிலை வைத்து மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது;
திண்டுக்கல்லை சேர்ந்த பிரேம் என்பவர் முருகபவனம், கொட்டபட்டி சாலையில் தனது அண்ணனுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ராமையன்பட்டியை சேர்ந்த செந்தூரியன் (எ) பாட்டா(25), கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த முகேஷ்குமார் (எ) ரெட் ஆகிய 2 பேரும் பிரேமின் கழுத்தில் உடைந்த பீர் பாட்டிலை வைத்து கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் வைத்திருந்த ரூ.2800 பணத்தை பறித்து சென்றதாக அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.