மாவட்ட அளவில் கடந்த ஆண்டு பிளஸ் -2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மகரிஷி பள்ளி மாணவா்களுக்கு பரிசு.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.;
திருவண்ணாமலை மாவட்ட அளவில் கடந்த ஆண்டு பிளஸ் -2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மகரிஷி பள்ளி மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. செங்கம் - குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2023-24 கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி நேத்ரா, பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி அபிநயா ஆகியோருக்கு கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் காா்த்திக் வரவேற்றாா். மகரிஷி கல்விக் குழுமத்தின் தலைவா் மகரிஷிமனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி ஆகியோா் கலந்துகொண்டு சாதனை மாணவிகளுக்கு சால்வை அணிவித்து கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினா். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் சரவணக்குமாா் ஆசிரியா் கோபி உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனர்.