கஞ்சா, மது விற்ற 2 பேர் கைது
காங்கேயம் அருகே கஞ்சா மது விற்ற இரண்டு பேர் கைது செய்த காங்கேயம் காவல்துறையினர்;
காங்கேயத்தில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை நடத்தினர். காங்கேயம், அகிலாண்டபுரம் பகுதியில் நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கதுரை (வயது 22) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தங்கதுரையை கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். காங்கேயம் ஒட்டப்பாளையம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த ரெங்கராசு (வயது 36) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.