தம்பதி மீது தாக்குதல் 2 பேர் கைது

அருமனை;

Update: 2025-05-20 14:54 GMT
குமரி மாவட்டம் அருமனை அருகே அண்டுகோடு பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் மனைவி பால்சி (56).  பைங்குளம் பகுதியை சேர்ந்த ராஜன் (29) மற்றும் முளங்குழி பகுதியை சேர்ந்த அஜித் (29) ஆகிய  நண்பர்கள் இருவரும் அடிக்கடி வின்சென்ட் விடு அமைந்துள்ள பகுதி வழியாக தனது உறவினர் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்படி சொல்லும் போதெல்லாம் யாரையாவது கெட்ட வார்த்தைகள் பேசி திட்டி கொண்டு செல்வது வழக்கம்.        இந்த நிலையில் சம்பவ தினம் அந்த வழியாக அந்த வழியாக சென்ற அஜித், ராஜன் ஆகியோர் கெட்ட வார்த்தைகள் பேசிய போது பால்சி கண்டித்துள்ளார். இதில்  அடைந்த இருவரும் சேர்ந்து பால் சியை  சரமாரியாக தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு அங்கு வந்து தட்டி கேட்ட  வின்சென்டையும்  தாக்கி உள்ளனர்.        அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அங்கு வந்து நடந்து வந்த சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்தார். இதனை அறியாத  அஜித்தும்,  ராஜனும் போலீசுக்கு சொல்கிறாயா?  என கூறியதோடு போலீசாரை  வசை பாடி உள்ளனர்.       மேலும் கத்தியை  காட்டி ரகளை செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்த தாக்குதலில்  காயமடைந்த இருவரும் குதித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அருமனை  போலீசார் ராஜன், அஜீத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று இருவரையும் கைது செய்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்திவிட்டு, சிறையில் அடைத்தனர்.

Similar News