மழை  முன்னெச்சரிக்கை   காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு 2 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை...தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்

மழை  முன்னெச்சரிக்கை   காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு 2 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை...தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம்...*;

Update: 2025-05-25 15:03 GMT
மழை  முன்னெச்சரிக்கை   காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு 2 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை...தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றம்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.இந்த கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் தற்பொழுது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மழை பெய்தால் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை இருந்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிடப்பட்டுள்ள மழை முன்னெச்சரிக்கை செய்தி குறிப்பில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று (25.05.2025) மற்றும் நாளை (26.05.2025) ஆகிய இரண்டு நாட்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு 2  நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சதுரகிரி கோவிலுக்கு வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Similar News