சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் 2வது நுழைவு வாயிலுக்கு இடம்: எம்எல்ஏ ஆய்வு
அரசு மருத்துவமனையில் நுழைவு வாயிலுக்கு இடம்: எம்எல்ஏ ஆய்வு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, ஹோமியோபதி மருத்துவ பிரிவு, இயற்கை மருத்துவ பிரிவு ஆகியவை உள்ளன. ரூ.9 கோடியில் புதிய கட்டடங்களுக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மருத்துவமனைக்கு மேற்குப்பகுதியில் மட்டும் நுழைவு வாயில் உள்ளதால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு அவசர சிகிச்சைக்குவரும் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. எனவே, வாகனங்கள் எளிதாக வந்துசெல்ல 2ஆவது நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோரிடம் ஈ.ராஜா எம்எல்ஏ கோரிக்கை விடுத்தாா். அதைத் தொடா்ந்து, மருத்துவமனைக்கு வடபகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் வழியாக காந்திநகா் நகராட்சிப் பள்ளிக்கு செல்லும் பாதையில் 2ஆவது நுழைவு வாயில் அமைக்கலாம் என இடம் தோ்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை எம்எல்ஏ ஆய்வு செய்தாா். அப்போது, அரசு மருத்துவா்கள், ஊராட்சித் தலைவா் கணேசன், திமுக ,நகரச் செயலா் பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.