தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதாக தக்கலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்ஐ ஸ்டீபன் மற்றும் போலீசார் குமாரகோவில் கிழக்கு தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ரப்பர் தோட்டம் அருகே இரண்டு வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓட முயன்றனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் 2 வாலிபர்களை துரத்தி சென்று மடக்கிப் படித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்ததில் காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்த மகேஷ் லால் (24) மற்றும் ஆற்றூரை சேர்ந்த அனிஷ் ( 23) என்பது தெரிய வந்தது. இருவரும் கல்லூரி மாணவர்களிடம் விற்க 15 கிராம் கஞ்ச வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.