பணப்பாக்கம்:வரவேற்பு நிகழ்ச்சியில் கத்தி வெட்டு-2 பேர் கைது!

வரவேற்பு நிகழ்ச்சியில் கத்தி வெட்டு-2 பேர் கைது!;

Update: 2025-06-07 07:29 GMT
பனப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இருவீட்டாரின் உறவினர்கள் திருமணத்துக்கு வந்திருந்தனர். விழாவில் பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரெட்டிவலத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 33) என்பவருக்கும், கீழ்வீதி கிரா மத்தை சேர்ந்த சூரியா (21) மற்றும் 17 வயது சிறுவனுக்கும் இடையே நடனமாடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது சூரியா மற்றும் சிறுவன் சேர்ந்து வெங்கடேசனை கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த வெங்கடேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து நெமிலி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்குப்பதிவு செய்து சூரியா மற்றும் சிறுவனை கைது செய்தார்.

Similar News