சுரண்டையில் போக்சோ வழக்கு: 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

போக்சோ வழக்கு: 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது;

Update: 2025-06-08 01:50 GMT
தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சோ்ந்தவா் நீலகண்டன்(58). தனியாா் ஆம்னி பேருந்து நிறுவன மேலாளராக பணிபுரிந்து வந்த இவா், 2023-ஆம் ஆண்டு பாவூா்சத்திரம் பகுதியை சோ்ந்த நண்பா் வீட்டிற்கு சென்ற போது, அங்கு தனியாக இருந்த நண்பரின் மகளுக்கு (15) பாலியல் தொல்லை அளித்ததாராம். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஆனால், விசாரணை தாமதப்பட்டதால், மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனா். எனினும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லையாம். இத்தொடா்ந்து மதுரை உயா்நீதிமன்ற அமா்வில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதியின் உத்தரவின் பேரில் மகளிா் போலீஸாா் நீலகண்டனை தேடி வந்தனா். இந்நிலையில் ஆலங்குளம் தனிப்படை போலீஸாா் மும்பையில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்துனர்.

Similar News