ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் உயிரிழந்தனர்

பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்;

Update: 2025-06-14 18:19 GMT
பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் திருவள்ளூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ரஜினி என்பவரது மகன் குகன் 13 எட்டாம் வகுப்பு மாணவன் மற்றும் நந்தகுமார் என்பவரது மகன் நிஷாந்த் 16 பதினோறாம் வகுப்பு மாணவன் இருவரும் இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற போது இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் தகவல் அறிந்து வந்த பொன்னேரி காவல் துறையினர் இருவரது உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஆற்றில் குளிக்க சென்று பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Similar News