குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தொழிலாளிக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 18 வயதான வாலிபருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவ தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். மாணவியுடன் பழகி வந்த வாலிபரும் மாயமானதாக தெரிந்தது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவி மற்றும் வாலிபரை தேடி வந்தனர். விசாரணையில் வாலிபர் அந்த மாணவியை திருமண ஆசை காட்டி, மாணவியிடம் இருந்து இரண்டரை பவன் தங்க செயின், அரைப்பவுன் மோதிரம் பெற்று அதை அந்த வாலிபர் தனது அண்ணனிடம் கொடுத்துள்ளார். அண்ணன் அந்த நகையை அடகு வைத்து ரூபாய் 60 ஆயிரம் பெற்று தனது தம்பியிடம் கொடுத்துள்ளார். இதை அடுத்து பணத்தை பெற்றுக் கொண்ட வாலிபர் மாணவியுடன் புறப்பட்டு சென்றுள்ளார். இருவரும் கோவை சென்று அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது மாணவியுடன் அந்த வாலிபர் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு வேளாங்கண்ணி உட்பட பல இடங்களுக்கு சென்று பார்த்துவிட்டு, கடைசியாக தஞ்சாவூர் வந்துள்ளனர். இதற்கு இடையில் வாலிபரின் செல் போன் எண்ணை கண்காணித்து வந்த தனிப்படை போலீசார், அவர்கள் தஞ்சாவூரில் இருப்பதை கண்டுபிடித்து அவர்களை பிடிப்பதற்காக மாணவியின் பெற்றோர் அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் விரைந்தனர். நேற்று முன்தினம் தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் வாலிபருடன் நின்று கொண்டிருந்த மாணவியை மடக்கிப் படித்தனர். இருவரையும் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவி மருத்துவ பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை அந்த வாலிபர் பலாத்காரம் செய்திருந்தால் போக்சோ வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.