திருச்சியில் நடைபெறும் மாநில மாநாட்டில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள். செந்தில் பிள்ளை கரூரில் பேட்டி

திருச்சியில் நடைபெறும் மாநில மாநாட்டில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள். செந்தில் பிள்ளை கரூரில் பேட்டி;

Update: 2025-06-15 10:29 GMT
திருச்சியில் நடைபெறும் மாநில மாநாட்டில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள். செந்தில் பிள்ளை கரூரில் பேட்டி கரூர் அடுத்த தாந்தோணி மலை தனியார் கூட்டரங்கில் கரூர் மாவட்ட சோழிய வெள்ளாளர் சமுதாய மக்கள் மாநில மாநாடு கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தலைவர் மலைக்கொழுந்து பிள்ளை தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் சோழிய வெள்ளாளர் சங்கத்தின் மாநில தலைவர் மருத்துவர் செந்தில் பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,ஜூலை 13 திருச்சியில் நடைபெறும் எங்களது மாநில மாநாட்டில் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் எங்களது அமைப்பின் ஒற்றுமை மற்றும் எண்ணிக்கையை பார்த்து எந்த அரசியல் கட்சியினர் ஆதரவளிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக வரும் தேர்தலில் செயல்படுவோம் என்றார். மேலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது வரவேற்கக் கூடிய விஷயம் எனவும் ,எங்களது அமைப்பில் பின்தங்கிய உள்ளவர்களுக்கு இதன் மூலம் பல சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். மேலும் எங்களது அமைப்பில் 42 உட் பிரிவுகள் உள்ளது.இதனை வேளாளர் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்றார். .

Similar News