கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த புகையிலை பொருட்கள் 2-காருடன் பறிமுதல்.

கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த புகையிலை பொருட்கள் 2-காருடன் பறிமுதல்.;

Update: 2025-06-19 12:07 GMT
கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த புகையிலை பொருட்கள் 2-காருடன் பறிமுதல். கர்நாடகா மாநிலம் பெங்களூருரிலிருந்து சட்டவிரோதமாக காரில் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கரூர் SPக்கு கிடைத்த தகவலின் பேரில் கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு S.I சையது அலி தலைமையில் குளித்தலை, சுங்ககேட் அருகே நேற்று இரவு வாகனத்தணிக்கை செய்த போது சந்தேகத்திற்கிடமாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் , சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.47,000/- மதிப்புள்ள 20-கிலோ எடை கொண்ட ஹான்ஸ் புகையிலை, விமல் பாக்கு 5 மூட்டை கைப்பற்றி, காரில் வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மணிகண்டன் 24 ,பரமத்தி வேலூரை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரிடம் இருந்து 2 கார்கள் ,ரூ.1,030- 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்து குளித்தலை காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News