சிறுமுகை அருகே மடத்தில் நகை, பணம் திருட்டு – 2 பேர் கைது!
சிறுமுகை அருகே மடத்தில் நகை பணம் திருடிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.;
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள அழகப்ப கவுண்டன் புதூரைச் சேர்ந்த ஜோதிடரும், அகஸ்தியர் சித்தர் பீடம் என்ற மடத்தின் நிர்வாகியுமான செந்தில்குமார், கடந்த 21ம் தேதி இரவு மடத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அடுத்த நாள் காலை திரும்பிய போது, மடத்தின் ஜன்னல் உடைக்கப்பட்டதும், கருவறை பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது. இது தொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேட்டுப்பாளையம் காட்டூரை சேர்ந்த அருண்குமார் (29), காளிதாஸ் (29) ஆகியோர் சம்பந்தப்பட்டிருக்கின்றது உறுதியாக, இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.