டாடா ஏசி வாகனம் மோதியதில் பெண் உட்பட 2பேர் உயிரிழந்தனர்
டாடா ஏசி வாகனம் மோதியதில் பெண் உட்பட 2பேர் உயிரிழந்தனர்;
திருவள்ளூரில் அதிவேகமாக சென்ற டாட்டா ஏசி வாகனம்(குட்டி யானை) அடுத்தடுத்து எதிரே வந்த 2 இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.படுகாயமடைந்த 2 பேருக்கு திருவள்ளூர் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே திருப்பந்தியூர் பகுதியில் திருமேனிகுப்பத்தில் இருந்து சுங்குவார்சத்திரம் நோக்கி சென்ற குட்டியானை லோடு வேன் ஓட்டுநர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்த நிலையில் எதிர் திசையில் வந்த 2 இரு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த திருமேனிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா(21),, அதேபோல் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த ராமச்சந்திரன்(70) என்ற முதியவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பார்த்திபன் மற்றும் பகவதி ஆகிய 2 பேரை மீட்ட அந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ராமச்சந்திரன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரது உடல்களை மப்பேடு காவல்துறையினர் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருசக்கர வாகனங்களை கைப்பற்றி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.அடுத்தடுத்து 2 இரு சக்கர வாகனங்கள் மீது மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.