நாட்டு வெடி குண்டு வீசியதில் ஒருவர் உயிரிழந்தர் 2பேர் படுகாயம்

பேரம்பாக்கம் அருகில் 3 பேர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதில் ஒருவர் உயிரிழப்பு.2 பேர் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update: 2025-06-26 14:13 GMT
பேரம்பாக்கம் அருகில் 3 பேர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதில் ஒருவர் உயிரிழப்பு.2 பேர் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியில் 3 பேர் மீது நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் முகேஷ் தீபன், ஜாவித் ஆகிய 3 பேரும் பேசிக்கொண்டு நின்று கொண்டிருந்த போது திடீரென அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு அவர்கள் மீது வீசியதில் முகேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலே சுருண்டு விழுந்தார்.மேலும் இந்த கும்பல் இருவரையும் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்தனர். தீபன் என்பவர் கையில் வெடிகுண்டு பட்டதில் கைகள் சிதறிவிட்டன மற்றொருவருக்கு காயங்கள் ஏற்பட்டது உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவமனை வரும் வழியில் முகேஷ் என்பவர் உயிரிழந்தார்.மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. நாட்டு வெடிகுண்டு வீசியது யார் என்றும் இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.உயிரிழந்த முகேஷ் வீடுகளுக்கு சிலிண்டர் போடும் வேலை செய்து வந்ததாகவும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆகாஷ் என்ற இளைஞரின் காதை வெட்டிய சம்பவத்திற்கு பழிக்கு பழியாக கொலை நடந்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News